மியன்மார் படுகொலைகளை கண்டித்து யாழில் போராட்டம்


349300485northமியன்மாரில் இஸ்லாமிய குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இனப் படுகொலையை நிறுத்த வேண்டும் என கோரியும், யாழ் மாவட்டத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.

யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 05 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இன்றைய புனித ஹஜ் பெருநாளை தாம் கறுத்த நாளாக கருதுவதாகவும், போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் வட மாகாண சபையின் உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், விந்தன் கனகரட்ணம், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு