இந்து சமுத்திரத்துக்கான தூரநோக்கு எம்மிடம் இருக்கிறது!-அமெரிக்கா


image_fa1b0ee114

 

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எமது பகிரப்பட்டுள்ள குறிக்கோளை உணர்ந்து கொள்வதற்காக இது திறந்த நிலையில் உள்ளது. கொள்கை ரீதியாகவும் நெகிழ்வானதாகவும் உள்ளது. இருதரப்பு மற்றும் பன்முக ஒத்துழைப்புக்கான வலுவானதொரு பிராந்தியக் கட்டமைப்பை நாம் பெற வேண்டியது அவசியமாகிறது. ” என, ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் தெரிவித்தார்.

இந்திய பசுபிக் பிராந்தியக் கட்டடக்கலை – இந்து சமுத்திர மாநாடு 2017இல், கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “பொருளாதார வளர்ச்சி, வெளிப்படையான அபிவிருத்தி மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் இந்து சமுத்திரத்துக்கான பொதுவான ஒரு தூரநோக்கு எம்மிடம் இருக்கிறது. பிராந்தியத்தின் குடிமக்களுக்கும் பொறுப்புடைமைகளுக்கும் முன்னுரிமை அளித்தல், திறந்த சந்தை, நிலையான நன்மைகளை வழங்குதல் ஆகிய பிராந்தியரீதியான முன்னெடுப்புக்கள் யாவும் மிகவும் நிலையானதாக இருக்கும்.

இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் மனிதாபிமான மற்றும் சுற்றுச் சூழல் பேரழிவுகளுக்குப் பதிலளிப்பதற்கும் நாடுகள் திறம்படச் செயலாற்றக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.

வழிநடத்தும் சுதந்திரம் மற்றும் சிக்கல்களின் அமைதியான தீர்வு ஆகியவற்றை உள்ளடக்கும் சர்வதேச நெறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு கொள்கையான பிராந்தியக் கட்டடக்கலை அமைப்பை நாம் ஆதரிக்க வேண்டும். அனைத்து நாடுகளும் சுதந்திரமாகப் பறந்து புறப்பட்டுச் சென்று சர்வதேசச் சட்டம் அனுமதிக்கும் இடங்களில் சென்று செயற்பட அவற்றுக்கு உரிமை உண்டு.

இந்து சமுத்திரமானது, உலகளாவிய வர்த்தகம் மற்றும் வாணிபம் ஆகியவற்றின் அடித்தளத்தில் உள்ளதனால் இதனுடைய கடல் மாக்கத்தின் வழியாகப் பயணிக்கும் வகையில் உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு உலக எண்ணெய் வர்த்தகமும் கிட்டத்தட்ட உலகின் அரைவாசியான 90,000 வணிகக் கப்பல்களும் பயணிக்கும் பாதையாக இது உள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் பூமியில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் சிலவும், உலகின் மக்கள் சனத்தொகையில் கால்வாசிப் பகுதியும் உள்ளதுடன், அவர்களில் ஐநூறு மில்லியன் பேர் வரையில் இன்னும் நம்பகத்தன்மை வாய்ந்த அதிகாரத்தைப் பெறாத நிலையில் உள்ளனர்.

பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துதல் என்பது, நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நாம் நம்புகிறோம். உதாரணமாக, தெற்கு மற்றும் தென்கிழக்காசியா, ஐம்பது சதவீதத்தால் தீர்வைகள் அற்ற தடைகளைக் குநைத்திருந்தால், ஓர் இலட்சியமான ஆனால், அடையக்கூடிய இலக்கை அதிகரிக்கப்பட்ட உள்நாட்டுப் பிராந்தியங்களுக்கு இடையிலான வர்த்தகம் 2030 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 568 பில்லியன் டொலருக்கு நிகராக இருக்கும்.

ஏற்கனவே, அமெரிக்க நிறுவனங்கள் இப்பகுதி முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. குடிபானப் போத்தல்களிலிருந்து விமானத்தின் உதிரிப் பாகங்கள் வரைக்குமான ஒவ்வொன்றினையும் இவை விநியோகம் செய்கின்றன. இந்தியாவில் மட்டும் அறுநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் ஐநூறு சதவீதத்தால் அதிகரிக்கும் வகையில் பங்களிப்புச் செய்துள்ளன.

நேபாளத்தின் போக்குவரத்து மற்றும் எரிபொருள் வளத்துறைகளில் அறுநூறு மில்லியன் டொலரை அமெரிக்கா முதலீடு செய்கிறது. இது இந்து சமுத்திரத்தில் நமது வர்த்தக உறவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பதற்கு இன்னுமொரு அறிகுறியாக விளங்குகிறது.

வெளிப்படையான வெளிநாட்டு நேரடி முதலீட்டினை ஊக்குவித்தல், எரிபொருள் வளச்சக்தி உட்கட்டமைப்பினை உருவாக்குதல், வளங்களுடனான வளர்ந்து வரும் தொழில் முனைவோர்கள் தமது கருத்துக்களை மேம்படுத்துவதற்காக அவர்களை இணைத்தல் ஆகியவற்றுடன் சட்டபூர்வமான மற்றும் ஒழுங்குமுறையான ஆட்சியை மேம்படுத்துவதற்கு தெற்காசிய நாடுகளுடன் நாம் பங்குதாரர்களாக இருப்போம்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், ஜூன் மாதத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இதைப் பற்றிச் சுட்டிக்காட்டியமையினால், இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் வெளிப்படையான உட்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் பொறுப்புக் கடன் நிதி முறைகள் மூலம் பிராந்தியப் பொருளாதார இணைப்புக்களை வளர்ப்பதாக உறுதி அளித்துள்ளன.

சட்டவிரோதமான, அறிவித்தல் விடுக்கப்படாத மற்றும் ஒழுங்குமுறையற்ற விதத்தில் மீன்பிடிக்கும் செயற்பாடுகளை உள்ளடக்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள கடல்சார் பொருளாதாரங்களை அச்சுறுத்தும் சிக்கல்களை எதிர்கொள்வதற்காக ஐக்கிய அமெரிக்கா பாதுகாப்பான ஓசோன் வலையமைப்பு மூலம் தனது பங்குதாரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

சட்டங்களை நடைமுறைப்படுத்துதல், வன்செயல்களையும் மீறல்களையும் கண்டறிதல், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களையும் சம்பந்தப்படுபவர்களையும் தண்டித்தல் ஆகிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை இந்த முயற்சி ஊக்குவிக்கிறது.

உலகெங்கிலும் இருந்து சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் பாதுகாப்பான ஓசோன் வலையமைப்பில் இணைந்துள்ளனர். அத்துடன் ஒவ்வொரு நாட்டினையும் இந்தப் பாதுகாப்பான வலையமைப்பில் சேர்ந்து கொள்ளுமாறு நாம் இத்தருணத்தில் அழைப்பு விடுக்கிறோம்.

இந்து சமுத்திரத்தில் உள்ள பங்குதாரர்களின் கடலோரப் பாதுகாப்புப் படையினரின் மனோபலத்தினைக கட்டியெழுப்ப அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இன்று முதல் இரு வாரங்களுக்குள், கடல்சார் மாசு தடுப்பு, சட்ட அமுலாக்கம், தேடல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் ஏனைய பல சிக்கல்களுக்கான ஒத்துழைப்பினை அதிகரிப்பதற்காக ஜப்பான் உலகக் கடலோரப் பாதுகாப்புப் படையினர் பொது மன்றக் கருத்தரங்கு ஒன்றை நடத்துகின்றனர். இப்பொதுக் கருத்தரங்கில் ஒவ்வொரு நாடும் கலந்து கொள்ளப்படுவதற்கு ஊக்கவிக்கப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினருக்கும் எமது கடற்படையினருக்கும் இடையிலான உறவை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாவது கடற்படைப் பயிற்சியைக் குறிப்பிடலாம். பங்களாதேஷ் நாட்டுடன், தென்கிழக்கு ஆசிய ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிநெறித் தொடர் போன்ற தொடர்ச்சியான பயிற்சிகள் மூலம் எமது தொடர்ச்சியான ஈடுபாட்டை நாம் மதிக்கின்றோம்.

அந்த நாள் மிக நீண்ட தொலைவில் இல்லை என்பதனை நாம் நம்புகின்றோம். இந்தப் பிராந்தியத்தின் அனைத்துக் கடற்படைகளும் இணைந்து பயிற்சியில் கலந்து கொள்ளவும் கூட்டுத் திறனை வளர்ப்பதற்காகவும் மற்றும் சர்வதேச ரீதியான தராதரங்களை நிலைநிறுத்துவதற்காகவும் கடல்சார் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் முடியும் என நாம் நம்புகின்றோம்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எமது பகிரப்பட்டுள்ள குறிக்கோளை உணர்ந்து கொள்வதற்காக இது திறந்த நிலையில் உள்ளது. கொள்கை ரீதியாகவும் நெகிழ்வானதாகவும் உள்ளது. இருதரப்பு மற்றும் பன்முக ஒத்துழைப்புக்கான வலுவானதொரு பிராந்தியக் கட்டமைப்பை நாம் பெற வேண்டியது அவசியமாகிறது. ஒரு மாநிலத்தில் அனைத்து நாடுகளும் சொல்வது, தீர்மானங்களை மேற்கொள்வது மற்றும் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுகின்றன” எனக் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு