பிரபாகரனை அடையாளம் காட்ட கருணாவை நானே அனுப்பினேன் – டியூ குணசேகர


OLYMPUS DIGITAL CAMERAஇறுதிக்கட்ட போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அடையாளம் காண கருணாவை நானே அனுப்பி வைத்தேன் என, முன்னாள் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் நீண்ட காலம் நீடித்த யுத்தம் அவ்வளவு சீக்கிரம் நிறைவடையும் என நான் நினைக்கவில்லை.அப்போதைய ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டிற்கு சென்றிருந்தனர்.

பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்தது. பிரபாகரனை உயிருடன் பிடித்து படகு மூலமாவது மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் பலருக்கு காணப்பட்டது.எனினும் 18ஆம் திகதி யுத்தம் நிறைவடைந்து விட்டது. எனது அமைச்சில் அப்போதைய பிரதி அமைச்சராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) செயற்பட்டார்.

அந்த சந்தர்ப்பத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக சமகாலஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவே செயற்பட்டார். பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்கு கருணாவை நானே அனுப்பி வைத்தேன்.

கருணா பிரபாகரனை அடையாளம் கண்டவுடன் நேரடியாக நாடாளுமன்றத்திற்கே வந்தார். யுத்தம் நிறைவடைந்தவுடன் நாடாளுமன்றத்தில் முதல் உரையை நானே நிகழ்த்தினேன்.

அந்த காலத்தில் நல்ல ஒற்றுமை காணப்பட்டது. அதுவே யுத்தம் வெற்றி பெறவும் காரணமாக இருந்ததென முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு