ஜெகத் ஜெயசூரிய பிரேசிலை விட்டு தப்பியோடினாா் – அமெரிக்கன் போஸ்ட்


dcp654787976464தென்னமெரிக்க நாடான பிரேசிலின் சட்டத்தின்படி போர்க்குற்றச் சாட்டுக்களில் ஈடுபட்ட ஒருவர் பிரேசிலில் தங்கியிருந்தால் அவர் மீது வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக்கொடுக்கமுடியும் என்ற காரணத்தினாலேயே மனித உரிமைச் செயற்பட்டாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்ததையடுத்து சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிரேசிலை விட்டுத் தப்பியோடினார் என அமெரிக்கன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்டின் கேட் குரோனின் ஃபாமன் என்ற செய்தியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா அங்கத்துவம் பெறாமையால், போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உள்ளூரில் விசாரணை நடைபெற்றால், அதன்மூலம் தண்டனை வழங்கப்படாமல் விடுபடலாம்.

எனவேதான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தென்னமெரிக்க நாடான பிரேசிலில் வழக்குத் தொடர்ந்தார். பிரேசிலின் சட்ட முறைமையின்படி தமது நாட்டுக்குள் வந்த ஒருவர் இனப்படுகொலை, சித்திரவதை போன்ற குற்றங்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு தண்டனை வழங்க முடியும்.

அத்துடன், லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு தீர்மானித்தால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்படும்.

இந்த நிலையிலேயே அவர் பிரேசிலைவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு