ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னும் மாயக்கல்லி மலையில் தொடர்கிறது சர்ச்சை


unnamed (7)இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில், பௌத்தர்கள், துப்பரவு பணிகளை மேற்கொண்டு சட்டவிரோதமாக தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அங்கு மீண்டும் சனிக்கிழமை (02) பதற்ற நிலை ஏற்பட்டது.

சில பௌத்த மத குருமார்களும் பௌத்த மக்களும் இணைந்து, தமிழ் நபரிடம் இருந்து காணியொன்றைக் கொள்வனவு செய்து, துப்பரவு பணிகளை மேற்கொண்டதாலும் தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை சட்ட விரோதமாக மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை தோன்றியது.

குறித்தச் சம்பவத்தை ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் விஜயம் மேற்கொண்டு, குறித்த மத அமைப்பின் பிரதிநிதிகளுடனும் பாதுகாப்பு படையினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அங்கு நடைபெற இருந்த வேலைத்திட்டங்களைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இது தொடர்பாக நேரடியாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை  முன்னெடுத்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

அதனைத் தொடந்து, குறித்த பதற்ற நிலை அமைதியான நிலைக்கு திரும்பியதுடன் இது தொடர்பான விரிவான ஆராய்வுகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதுடன், அங்கு பௌத்த நபர்களால் மேற்கொள்ளவிருந்த செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சரின் தலையீட்டால் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹபிஸ் நசீர் அஹமட் ஆகி­யோ­ருக்­குமி­டை­யி­லான  சந்­திப்­பொன்று  வௌ்ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்ற வளா­கத்தில் நடை­பெற்­றது.

இச்­சந்­திப்­புக்கு குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

அம்­பாறை மாயக்­கல்லி மலையில் பௌத்த விகா­ரை­யொன்றை அமைப்­ப­தற்­காக காணி­களை அள­விடும் செயற்­பா­டுகள் கடந்த புதன்­கி­ழ­மை­யன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

தழிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பகு­தியில் இவ்­வா­றான விகாரை அமைப்­ப­தற்­காக  காணி அள­விடும் செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­ட­மை­யா­னது பல்­வேறு சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் ஆகியோர் இணைந்து செயற்­ப­டு­வ­தென  வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற சந்­திப்பில் இணக்­கப்­பாட்­டினை எடுத்­தி­ருந்­தனர்.

இதன்­போது மாயக்­கல்லி மலையில் விகாரை அமைப்­ப­தற்­காக எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் அத­னை­ய­டுத்து எழுந்த சர்க்­சைக்­கு­ரிய நிலை­மைகள் தொடர்­பாக ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு இரு தலை­வர்­க­ளாலும் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

அத­னை­ய­டுத்து இறக்­காமம் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையை  அண்­டிய பகு­தியில்  சிறு­பான்­மை­யி­னரின் காணி­களே உள்­ளன. அவர்­களின் காணி உறு­திகள்  உள்­ளிட்ட ஆவ­ணங்கள்  ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

ஆத்­துடன் கடந்த அர­சாங்க காலத்தில் சிறு­பான்மை இனங்­க­ளுக்கு குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு மதத்தின் பெயரால் இழைக்­கப்­பட்ட அநீ­திகள் தொடர்­பா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

ஆகவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்த்தில் மீண்டும் அவ்­வா­றான நிலை­மைகள் ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­க­கூ­டாது எனவும் இரு தலை­வர்­க­ளாலும் கோரப்­பட்­டது.

இச்­சந்­தர்ப்­பத்தில் குறித்த விடயம் சம்­பந்­த­மாக உட­ன­டி­யாக தான் கவனம் செலுத்­து­வ­தா­கவும் நிலை­மை­களை ஆராய்­வ­தோடு அநீ­தி­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் குறிப்­பாக முறை­யற்ற வகையில் மேற்­கொள்­ளப்­படும் இத்­த­கைய செயற்­பாட்டை உடன் நிறுத்­து­வ­தற்­கான நட­டி­வக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய பணிப்­பு­ரை­களை வழங்­குவேன் எனவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­ட­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு