படையினர் மீது கைவைக்க விடமாட்டேன் – மைதிரி


maithry14இந்த நாட்டிலோ, உலகத்திலோ உள்ள எந்தவொரு தரப்பினராயினும் முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவோ அல்லது எந்தவொரு படையினர் மீதோ கைவைப்பதற்கு இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொரல்லை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் 66 வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த உறுதியை அளித்தார்.

சங்கீத நாட்காலி போட்டிக்கோ, விநோத போட்டிகளுக்காகவோ தாம் ஒன்றிணைந்த கூட்டு அரசாங்கத்தை தோற்றுவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் அண்மையில் தோற்றம் பெற்ற முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின் பிரச்சினை தொடர்பாக கருத்து வௌியிட்ட ஜனாதிபதி, இது எமது கடல் எல்லைக்கு அப்பாற்பட்ட பிரச்சினை ஆனால் இந்த விடயத்தில் எனது நாட்டினர் மீது எவருக்கும் கைவைக்க அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்தார்.

அதேவேளை, 66 வது சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஆண்டு விழாவில் தேசப்பற்றாளர்கள், இன பற்றாளர்கள் மத்தியில் கொண்டாட கிடைத்தமையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு