யுத்தம் இல்லை, சத்தமில்லை என்றால் பிரச்சினை முடிந்தது என்று அர்த்தம் இல்லை


mano-ganeshan-tpk-650x450இந்த நாட்டில் யுத்தம் முடிந்துள்ளதாக கூறப்பட்டாலும் அந்த யுத்ததிற்கான மூலம காரணம் அப்படியே உள்ளது. அதற்கு எந்த முடிவும் காணப்படவில்லை என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் ஆரம்பமானது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலயத்தில் இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.

´அரசசேவை உங்களுக்காக´ என்னும் தலைப்பில் பொதுமக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்து வைக்கும் வகையில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி வி.சிவப்பிரியா தலைமையில் நடைபெற்றபோது தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், மட்டக்களப்பு மாவட்டம் கடந்த காலங்களில் சொல்லொண்ணா துன்பங்களை எதிர்கொண்ட மாவட்டம்.

பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்ட மாவட்டம் யுத்தம் முடிவடைந்தாலும் அந்த யுத்ததிற்கான அடிப்படை காரணங்களும் மூலகாரணங்களும் உள்ளது.

அதற்கு எந்த முடிவும் காணப்படவில்லை.

யுத்தம் இல்லை, சத்தமில்லையென்றால் பிரச்சினை முடிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை.

யுத்தம்தான் இல்லை.பிரச்சினையிருக்கின்றது.அந்த பிரச்சினைகளுக்கு நாங்கள்படிப்படியாக தீர்வினை கண்டுவருகின்றோம் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு