சமூக வலைத்தளவாசிகளுக்கு பொலிஸார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தினால் பதில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய, நேற்று (18) அதிவிசேட வர்த்தமானி மூலம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

மேற்படி, அதிவிசேட வர்த்தமானியின் 15 ஆவது சரத்துக்கமைய, பொதுமக்களை அச்சுறுத்தக்கூடிய, பீதியடைச்செய்யும் அல்லது பிரிவினை வாதத்தை தூண்டக்கூடிய வகையிலான கருத்துகளை, சமூகவலைத்தளம் உள்ளிட்ட வேறுவழிகளில் வெளிப்படுத்தல் மற்றும் பகிர்வதை தவிர்க்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இலத்திரனியல் அல்லது சமூக வலைத்தளங்களின் ஊடாகவோ மேற்குறிப்பிட்ட வகையிலான கருத்துகளை வெளிப்படுத்தும் மற்றும் பகிர்வோருக்கு எதிராக கணினிக் குற்றப்புலனாய்வு பரிவினரால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்படடுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தகைய கருத்துகளை பரப்புவோருக்கு எதிராக நாட்டின் எந்தவொரு பொலிஸ் நிலையம் மற்றும் விசாரணைப்பிரிவினரால், அவசரகால சட்ட அதிவிசேட வர்த்தமானியின்படி அல்லது வேறுவகையிலான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *