இரணைமடு திட்டத்தின் எதிர்ப்பால் யாழ்ப்பாணம் பாதாள சாக்கடை திட்டத்திற்கான 45 மில்லியன் டொலர் இழக்கப்பட்டுள்ளது


viknesharan-300x196இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்தை வடமாகாணசபை நிராகரிக் கவில்லை. மேற்படி திட்டத்திற்கு கிளிநொச்சி விவசாயிகள் காட்டிய எதிர்ப்பினால் நாம் மாற்று திட்டத்தை சமர்ப்பித்தோம்.

அதற்கமைய 3 திட்டங்களாக இரணைமடு – யாழ்ப்பாணம் திட்டம் பிரிக்கப்பட்டது. அதில்  மட்டும் நிராகரிக்கப்பட்டது. அதனால் 45 மில்லியன் அமெரிக்க டொலரே இழக்கப்பட்டது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் 3 வருடங்கள் 9 மாதங்களின் செயற்பாடுகள் தொடர்பான 3ஆம் அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபாமண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதன்போதே முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மேற்கண்டவாறு கூறினார். மேலும் கூறுகையில்,

இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது நிதி வீணாக்கப்பட்டது என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகிறார். ஆனால் இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்த கிளிநொச்சி மக்கள் காட்டிய எதிர்ப்பினால் நாம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேசியதன் அடிப்படையில் அந்த

திட்டம் 3 திட்டங்களாக மாற்றியமைக்கப்பட்டு எம்மால் மாற்றுதிட்டம் கொடுக்கப்பட்டது.

அதனை ஆசிய அபிவிருத்தி வங்கி ஏற்றுக் கொண்டு, 3 மாற்றுத் திட்டங்களுக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் பயன்படுத்தப்படவிருந்தது.

இந்த நிலையில் யாழ். மாநகர பாதாள சாக்கடை திட்டம் மட்டும் இழக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பணம் தர இருந்த பிரெஞ்ச் அரசாங்கம் அந்த பணத்தை வழங்க மறுத்தமையே ஆகும்.

மேலும், யாழ்.காக்கை தீவில் ஒரு மாற்று திட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் பிரெஞ்சு அரசாங்கத்திடம் பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த பணம் மீளவும் கேட்கப்படவுள்ளது. அதனை ஆசிய அபிவிருத்தி வங்கி எமக்காக கோரும் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு