இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் தமிழகத்தின் நிர்மலா சீதாராமன்


Nirmala2மத்திய அமைச்சரவை மாற்றத் தில், நான்கு இணையமைச்சர்கள், அமைச்சரவை அமைச்சர்களாக உயர்த்தப்பட்டனர்; புதிதாக, ஒன்பது பேர் இணையமைச்சர்களாக சேர்க்கப் பட்டுள்ளனர். இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி, தமிழகத்தின் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திராவுக்கு பின், ராணுவ அமைச்சராகும் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2014ல் அமைந்த பின், இதுவரை, இரண்டு முறை மத்திய அமைச்சரவை மாற்றி யமைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என, சில மாதங்களா கவே பேசப்பட்டு வந்த நிலையில், நேற்று மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் மத்தியஅமைச்சரவை பலம், 73ல் இருந்து, 76 ஆக உயர்ந்தது.

பாதுகாப்புத்துறை அமைச்சராக ,  நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ராணுவத்துக்கான முதல் பெண் அமைச்சர் என்ற பெருமை அவரை சேர்கிறது.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, இரண்டு முறை, பாதுகாப்புத்துறை அமைச்சகத்தையும் கூடுதலாக கவனித்து வந்தார். ஆனால், ராணுவத்துக்கென தனியாக ஒரு பெண் அமைச்சர் நியமிக்கப்படுவது, இதுவே முதல் முறை.

பாதுகாப்புத்துறை அமைச்சரானதன் மூலம், பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டத் தில், பிரதமர், நிதி, உள்துறை, வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன், இனி, நிர்மலாவும் கலந்து கொள்வார்..

மதுரையில் பிறந்தவர் நிர்மலா சீதாராமன், 58 வயது. திருச்சி சீதாலட்சுமி கல்லுாரியில் பி.ஏ., படித் தார், டில்லி ஜவஹர்லால் நேரு பல் கலையில் எம்.ஏ., (பொருளாதாரம்) பயின்றார். பா.ஜ., செய்தித் தொடர்பாளராக இருந்தார். 2014ல் வர்த்தகத் துறை இணை அமைச்சரானார்.
2016ல் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி. ஆனார். தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை பெற்றார். இந்த துறையை மறைந்த பிரதமர் இந்திரா கூடுதல் பொறுப்பாக மட்டுமே கவனித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு