சரன குணவர்தன குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது


10885168691367534893Sarana-Gunawardhana--Lமுன்னாள் பிரதியமைச்சரும், அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவருமான சரன குணவர்தன கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட தருணத்தில் அரச வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரன குணவர்தன பிரதியமைச்சராக பதவிலிருந்த போது அபிவிருத்தி லொத்தர் சபையில் கேள்வி பத்திர சபையின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.

அந்த தருணத்தில் அவர் 80 லட்சத்து 95 ஆயிரம் ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை கொள்வனவு செய்திருந்த போது குறித்த வாகனம் இதுவரை நிறுவனத்தில் பாவனையில் இல்லை என கொழும்பு குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட சரண குணவர்தனவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு