20 வது அரசியலமைப்பு திருத்தம் வட மாகாண சபையிலும் ஒருமித்த எதிர்ப்ப


northern provincil councial 6654720 ஆவது அரசியலமைப்பு  திருத்தச் சட்டத்திற்கு வடக்கு மாகாண சபையிலும் ஒருமித்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாகாண சபையில் விவாததிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே  அனைத்து தரப்பினராலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது

இதன்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறுகையில்,

மாகாண சபைகளின் காலத்தை நீடிப்பது அல்லது குறைப்பது மற்றும் மாகாண சபை தேர்தல்களை ஒரு திகதியில் நடத்துவது என்னும் அடிப்படையில் மாகாண மக்களுக்கு இருக்கும் தேர்தல் உரிமையினை பறிப்பதாக உள்ளது.

மாகாணசபைகள் கலைக்கப்பட்டதன் பின் மாகாணசபைகளுக்கான அதிகாரம் நாளுமன்றத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளமை மக்களின் இறையாண்மையில் கைவைப்பதாக இருக்கின்றது.

மேலும் இந்த சட்டமூலம் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு வழங்கப்படவுள்ள அரைகுறை தீர்வை எம்மீது திணிப்பதற்கான சதி என முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், மற்றும் கல்வி அமைச்சர் சர்வேஷ்வரன் ஆகியோரும் 20ம் சட்டமூலம் மாகாண மக்களின் இறைமையில் கை வைப்பதாக உள்ளது என கூறியிருந்தார்கள்.

இதேபோல் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இறுதியாக அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் கோரிக்கைக்கு அமைவாக 20ம் திருத்த யோசனைஅங்கீகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக 7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு