2017ஆம் ஆண்டு கூட்டுப்படைகளின் பயிற்சிகள் மின்னேரியாவிலிருந்து ஆரம்பம்


com_ex_1st_00இலங்கை இராணுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டிற்கான கூட்டு நடவடிக்கை பயிற்சிகள் எட்டாவது தடவையாக 69 வெளிநாட்டு இராணுவத்தினரது பங்களிப்புடன் இராணுவ மின்னேரியா காலாட்படை பயிற்சி முகாமில் நேற்று (03)ஆம் திகதி ஆரம்பமாகியது.இலங்கை இராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கூட்டுப்படைகளின் நடவடிக்கை பயிற்சிகள் மின்னேரியா காலாட் படை பயிற்சி முகாம் தலைமையகத்தில் நேற்று (3) ஆம் திகதி அறிமுக நிகழ்வுகடன் ஆரம்பமானது இடம்பெற்றது.

இப் பயிற்சியில் பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாக்கிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், சூடான், ஈராக், இஸ்ரேல், ஓமான், துருக்கி, ஈரான் மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் இருந்து வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள்  பங்கேற்றிருந்தனர்

இந்த கூட்டுப்படை பயற்சி நடவடிக்கைகளில் முழுமையாக 2675 பேர் பங்கேற்பதுடன்,வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள் 69பேரும்,இலங்கை இராணுவத்தின் காலாட்படையினர்,கொமாண்டோ மற்றும் விஷேட படையினரும் உள்ளடக்கப்பட்டுள்ளனா். மேலும் இலங்கை கடற்படை,விமானப் படையினரும் பங்கேற்கவுள்ளனா் இராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

கூட்டுப் படைப் பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர,பிரிகேடியர் நிஷாந்த ஹேரத்,பிரிகேடியர் சுஜீவ செனரத் யாபா,பிரிகேடியர் உதித பண்டார,கேர்ணல் சந்திர ஜயவீர,கேரணல் சுஜீவ ஹெட்டியாரச்சி மற்றும் கேர்ணல் சந்தன விக்கிரமசிங்க போன்ற சிரேஷ்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் இடம்பெறுகின்றது. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு