வித்தியா படுகொலை பிரதான சந்தேகநபரை விடுவித்த சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு


punkuduthivu-vithyaயாழ்ப்பாணம் – புங்குடுதீவு பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீண்டும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் இன்று (04) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வித்தியாவின் படுகொலை தொடர்பில் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற ட்ரயலட்பார் நீதிபதி குழாம் முன்னிலையில் வழங்கப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் குற்றவிசாரணை திணைக்களம் சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு