தனிப்பட்ட பழிவாங்கல்களில் இராணுவத்தை இழுக்காதீர்கள்- மகேஸ் சேன­நா­யக்க


makeshஇராணு­வத்­துக்கு இழப்பை ஏற்­ப­டுத்­தும் வகை­யில், முன்­னாள் தள­ப­தி­கள் தமக்­கி­டை­யி­லான தனிப்­பட்ட பிரச்­சி­னை­க­ளைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளக் கூடாது என்று இரா­ணு­வத் தள­பதி லெப்.ஜென­ரல் மகேஸ் சேன­ நா­யக்க தெரி­வித்­தார்.

பிரே­சி­லில் தமக்­கெ­தி­ராகச் சுமத்­தப்­பட்­டுள்ள போர்க்­குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்­தி­ருந்த ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய, தமக்கு எது­வும் தெரி­யாது என்­றும், போர்க்­குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பாக அப்­போது இரா­ணு­வத் தள­ப­தி­யாக இருந்த பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­காவே பதி­ல­ளிக்க வேண்­டும் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

வன்­னிப்­ப­டை­க­ளின் தள­ப­தி­யாக இருந்தபோது, ஜென­ரல் ஜய­சூ­ரிய குற்­றங்­களை இழைத்­தார் என்­றும் அதற்­கான ஆதா­ரங்­கள் தம்­மி­டம் இருப்­ப­தா­க­வும், முறை­யான விசா­ரணை நடத்­தப்­பட்­டால் அவ­ருக்கு எதி­ராக சாட்­சி­ய­ம­ளிக்­கத் தயார் என்­றும் பொன் ­சேகா தெரி­வித்­தி­ருந்­தார்.

இவர்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டு­கள் அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில், இது­கு­றித்து இரா­ணு­வத்  தள­பதி லெப். ஜென­ரல் மகேஸ் சேன­நா­யக்க கருத்து வெளி­யிட்­டுள்­ளார்.

‘ஜென­ரல் ஜய­சூ­ரி­ய­வின் பத­விக் காலத்­தில் நான் அவ­மானப்படுத்­தப்­பட்­டி­ருந்த போதி­லும், அவ­ரைப் பழி­வாங்க முயற்­சிக்­க­வில்லை. போர்க்­கா­லத்­தில் இரா­ணு­வத் தள­ப­தி­யாக இருந்து, பெறு­ம­தி­ வாய்ந்த சேவை­யாற்­றிய பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­காவை இரா­ணு­வம் மதிக்­கி­றது.

நாட்­டுக்­காக, 28 ஆயி­ரம் அதி­கா­ரி­க­ளும் படை­யி­ன­ரும் தமது உயிர்­களை இழந்­தி­ருக்­கின்­ற­னர். பீல்ட் மார்­சல் சரத் பொன் ­சே­கா­வின் கருத்து வருத்­த­ம­ளிக்­கி­றது. இரா­ணு­வத்­துக்கு இழப்பை ஏற்­ப­டுத்­தும் வகை­யில், முன்­னாள் தள­ப­தி­கள் தமக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­க­ளைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளக் கூடாது’ என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

மகேஸ் சேன­நா­யக்க, 2010ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லின்­போது சரத்­பொன்­சே­கா­வுக்கு ஆத­ர­வா­கச் செயற்­பட்­டி­ருந்­தார் என்று குற்­றம் சுமத்தி மகிந்த அர­சில் பழி­வாங்­கலை எதிர்­கொண்­டி­ருந்­தார். நாட்டை விட்டு வெளி­யேறி, ஆட்சி மாற்­றத்­தின் பின்­னரே மகேஸ் சேன­நா­யக்க நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு