ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் மக்கள் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது


1251536161UOORANI-Lஅண்மையில் மக்கள் மீள் குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடக்கு ஊறணிப் பிரதேசத்தில் இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்த ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று (04) முற்பகல் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி யாழ் மேலதிக அரச அதிபர் (காணி) முரளிதரனிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக 2015 ஜனவரி 09 இல் பதவியேற்றது முதல் இதுவரையும் சுமார் 3000 ஏக்கருக்கும் அதிகமான மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களிலும் கிரமமாக காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு