நல்லாட்சி அரசிலும், சிங்கள முஸ்லிம் தமிழ் ஒற்றுமைகள் சீர்குலையும் அபாயம்


downloadதமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை ஒரு சில சிங்கள அமைப்பினர் மேற்கொள்ளும் பிழையான நடவடிக்கைகளால் ஒற்றுமைகளை இழக்க வேண்டிய சந்தர்ப்பங்களுக்கு மக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம், தமிழ் பிரதேசங்களில் இடம்பெறும் அத்துமீறல்களால் இன ஒற்றுமை கடந்த ஆட்சி போல் இல்லாமல் போய்விடும் அபாயம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முயற்சியினால் மட்டக்களப்பு, மண்டூர் பிரதேசத்தில் புதிதாக 5.3 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட ஆயுள்வேத மத்திய மருந்தகத்தினை அம்மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் நல்லாட்சி அரசில் எமது ஒற்றுமையையும் அபிவிருத்திகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த ஆட்சியில் சில பெளத்த அமைப்புக்களில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைகளையும் சீரழித்து இதனால் அவ்வாட்சியை சிறுபான்மை மக்கள் விரட்டினார்.

ஆனால், இன்றும் நல்லாட்சி அரசிலும் சில பெளத்த அமைப்புக்களின் கெடுபிடிகள் அம்பாறை மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்டுகின்றது.

இறக்காமம், மானிக்கமடு பிரதேசத்தில் தமிழ் மக்களின் காணிகளை கொள்வணவு செய்து சிங்கள மக்களே இல்லாத இடத்தில் சிங்கள புத்தர் சிலைகளை அமைப்பதற்கு முஸ்தீபுகள் இடம்பெற்றாலும் அவற்றை நாம் முறியடித்துள்ளோம்.

இவ்வாறு தமிழ் முஸ்லிம் சிங்கள ஒற்றுமைகள் சீரழிக்கப்படுகின்றதை நாம் அவதானத்துடன் செயற்பட்டு அவற்றுக்கு சரியான தீர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைகள் மூலமே சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

மாகாண ரீதியாக சுதேசத் திணைக்களம் இன்று அதிக வளர்ச்சியடைந்து வருவதை இட்டு நான் அகம் மகிழ்கின்றேன்.

நாட்டு வைத்திய முறைமை இன்று எமது கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வருகின்றது.

நான் மாகாண அமைச்சை பொறுப்பெடுத்த போது சுதேச திணைக்களத்திற்கான நிதி போதாமையாக இருந்ததை கவனத்திற் கொண்டு சில திட்டங்களை வகுத்து தற்போது சுதேசத் திணைக்களத்திற்கும், சுகாதாரத் திணைக்களத்திற்கும் நிதிகளைப் பெற்று வைத்தியசாலைகளை மாகாண ரீதியாக சிறப்பாக செயற்பட முயற்சி செய்து சிறந்து முறையில் மேற்கொண்டு வருகின்றோம்.

அது மாத்திரம் இன்றி தற்காலிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளை இன்று நிரந்திர கட்டிடங்களுக்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இதன்போது கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துறைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான நடராஜா, துறைரட்னம், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முருகாணந்தன், கிழக்கு மாகாண சுதேச திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்களுடன் மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள், வைத்திய அத்தியட்சகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பான வேறு பதிவுகள்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு