ஜனாதிபதியை சந்திக்க கிளிநொச்சி அரச அதிபரால் அழைத்துச் செல்லப்படுபவா்கள் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை பிரதிநிதித்துவப்படுத்துபவா்கள் அல்ல


m1வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை சந்தித்த ஜனாதிபதி பல வாக்குறுதிகளை அளித்திருந்தார். ஆனால் அவ் வாக்குறுதிகள் எவையும்  இதுவரையும் நிறைவேற்றப்படவில்லை இந்த நிலையில் மீண்டும் அவரை சந்திப்பதற்கு எம்மை அழைத்துச் செல்வது என்பது  வெளிநாட்டு இராஜதந்திரிகளை ஏமாற்றுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கையா என கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களின் சங்கத்தினா் கேள்வி எழுப்பியுள்ளனா்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினா்கள் இன்று   கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போதே இவ்வாறு தெரிவித்தனா்.
குறித்த ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இடம்பெறும் பகுதியில் இடம்பெற்றது.
ஜனாதிபதி நாளை (06) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு  சிலர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவா்கள் யாா்?  என்பது எமக்குத் தெரியாது கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நாம் ஒரு அமைப்பாக இருந்து செயற்பட்டு வருகின்றோம் எனத் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்
 இந்த ஊடக சந்திப்பின் மூலம் நாம் பகிரங்கமாக தெரியப்படுத்துவது யாதெனில், நாளை இடம்பெறும் சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அல்ல. அவர்கள் அழைத்து செல்பவர்கள் எப்படியானவர்கள் என்பது எமக்க தெரியாது என அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு