போர்வீரர்கள் என்ற போர்வைக்குள்ளிருந்து தவறு செய்பவர்களை பாதுகாப்பது நியாயமற்றது – பொன்சேகா!


mnbnஇராணுவச் சீருடையில் போர்வீரர்கள் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு தவறு செய்தவர்களை பாதுகாக்க முற்படுவது நியாயமற்றது என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அரசாங்கத்திலுள்ள தலைவர்களும் புரிந்துகொள்ளவேண்டுமென பீல்ட் மார்சலும், அரசியல்வாதியுமான பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில், வல்லுறவுகள், கொலைகளைச் செய்த படைகள் தண்டிக்கப்பட்டதை நாம் அறிவோம். மன்னம்பேரி, எம்பிலிப்பிட்டிய மாணவர் படுகொலைக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது மக்களுக்கு ஆதரவாக அரசாங்கம் இருந்தது. மக்களின் பக்கமே தலைவர்கள் எப்போதும் இருக்கவேண்டும்.

நான் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால் தான், மக்கள் சுதந்திரமாக மூச்சு விடுகிறார்கள். ஊடகங்களும் தமது விருப்பப்படி எழுதுகின்றன.

போரை முடிவுக்கு கொண்டு வந்த நான் துரோகி என்றால், நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள், வெள்ளை வான்களில் கடத்தி மக்களைக் கொலை செய்தவர்கள், ஊழல்கள்இ மோசடிகள் செய்தவர்கள் எல்லாம் தேசப்பற்றார்களா?

நான் இராணுவத்தில் இருந்த இரண்டு இலட்சம் படையினருக்கு உத்தரவுகளை வழங்கினேன். அவ்வாறான இராணுவத்தில் இருந்த ஒருவர் தான் ஜெகத் ஜயசூரிய. அவர் போர் நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருக்கவில்லை.

ஒரு நபர் போர்வீரராக இருக்கிறார் என்பதற்காக மக்களின் எதிர்பார்ப்புக்களை நொருக்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது . ஒவ்வொரு தலைவரும் அதனைப் புரிந்துகொள்ளவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு