வெளிக்கடை துப்பாக்கிச் சூட்டு சாட்சியாளரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு


030கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற வெலிக்கடை துப்பாக்கிச் சூட்டு சம்பத்தை நேரில் கண்ட சாட்சியாளரான சுதேஷ் நந்திமாலின் வீட்டில், துப்பாக்கிதாரர்கள், துப்பாக்கிப் பிரயோகம்  மேற்கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவை பகுதியில், நேற்று இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக, பொலிஸ் அவரச இலக்கச் சேவையான 119க்கு அழைப்பு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாக, எந்தவொரு உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை என்றும் எனினும், குறித்த வீடு மற்றும் வாயில் கதவு போன்றவற்றில், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டில், நந்திமாலும் அவருடைய சகோதரியும் வாழ்ந்து வருவதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு