ரோஹிங்யா மக்களை பாதுகாக்க மியன்மார் அரசாங்கம் தவறிவிட்டது – இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்


hjjjhhhhhhkhமியன்மார் நாட்டில் ரோஹிங்யா மக்களை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் தவறிவிட்டது. இந்த விடயம் தொடர்பாக சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு எமது நாடும் மக்களும் முன்வரவேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள் அறிக்கையில்,

மியன்மார் நாட்டில் வசிக்கின்ற ரோஹிங்யா மக்களை பாதுகாப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தவறிவிட்டது. இதன் காரணமாக பலருடைய உயிர் காவு கொள்ளப்பட்டிருக்கின்றது. இலங்கையில் இவ்வாறான 30 வருட கால யுத்தத்தின் போது எமது மக்கள் அனுபவித்த துன்பத்தை நாங்கள் நன்கு அறிவோம்.

எனவே இந்த செயற்பாட்டிற்கு எதிராக எமது மக்களும் எமது நல்லாட்சி அரசாங்கமும் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுத்து ஐக்கிய நாட்டின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிகளை மியன்மார் நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மியன்மாரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25 திகதி முதல் இடம் பெற்றுவரும் வன்முறைகள் காரணமாக பலர் பலியாகியுள்ளனர். இதுவரையில் சுமார் 90,000 பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடான பங்களாதேசில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மியன்மார் நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்ற ரோஹிங்யா மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலமையானது மிகவும் கவலை அழிக்கின்ற ஒரு செயற்பாடாகும். அந்த வழியும் வேதனையும் எங்களுக்கு நன்கு தெரியும்.

எமது நாட்டில் 30 வருட கால யுத்தத்தில் எமது மலையக மக்கள் உட்பட பலரும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். தற்பொழுது நல்லாட்சி அரசாங்கத்தில் அது படிப்படியாக குறைந்து வருகின்றது.

மியன்மாரில் ரோஹிங்யா மக்கள் அதிகம் வாழும் ராகைன் பிராந்தியத்தில் அந்த நாட்டின் இராணுவத்தினர் வீடுகளுக்கு தீவைத்து பலரையும் கொடூரமான முறையில் கொலை செய்ததை தொடர்ந்து அந்த மக்கள் தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்கு இடம்பெயர்ந்து வருகின்றார்கள்.

இந்த மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் 700 இற்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குடிபெயர்ந்து சென்றுள்ள மக்களை மீண்டும் அழைத்து வந்து அவர்களை குடியமர்த்தவும் அந்த நாட்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு எமது அரசாங்கம் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு