கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் கையெழுத்திட அரசாங்கம் இணக்கம்


9948472933_55e0098b0a_zகொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதென ஜெனிவாவுக்கான இலங்கையின்  தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஜெனீவாவில் நடைபெற்ற கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் நாடுகளின் 7ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 2011ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் மாநாட்டில் கலந்துகொண்டு வருகின்றது.

விரைவில் இந்த பிரகடனத்தில் கையெழுத்திடுவதாக இலங்கை உறுதியளித்திருப்பதை, கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்வதற்கும் கண்ணிவெடிகளைத் தடை செய்வதற்கும் ஆதரவாக பரப்புரைகளை மேற்கொள்ளும் நாடுகளும் அமைப்புகளும் வரவேற்றுள்ளன.

இலங்கை கொத்தணிக் குண்டுகளை உற்பத்தி செய்யாத போதிலும் இறுதிக் கட்ட யுத்தத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு