சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை


sarat-300x168சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக, கூட்டு எதிரணி அறிவித்துள்ளது.

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இதுகுறித்து கொழும்பில்  செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவது தொடர்பாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் கலந்துரையாடவுள்ளனர்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருந்து கொண்டு, போர் வீரர்கள் தொடர்பாக இவர் சிறிலங்கா அதிபரின் கருத்துக்கு முற்றிலும் மாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்றைய கலந்துரையாடலில் முடிவெடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு