முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷவுக்கு மூன்று வருட கடுழீய சிறை


1209825452Lalithமுன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோர் குற்றவாளிகள் என, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சீல் துணிகளை விநியோகம் செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

இதன்படி, இன்று இந்த வழக்கில் இவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது.

அனுஷ பெல்பிட மற்றும் லலித் வீரதுங்க ஆகிய இருவருக்கும் மூன்று வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருவர் தலா 50 இலட்சம் ரூபா வீதம் இருவரும் 100 இலட்சம் ரூபா நஸ்டஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை செப்டம்பர் 20ம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனுஷ பெல்பிட்ட மற்றும் லலித் வீரதுங்க ஆகியோருக்கு இரண்டு மில்லியன் ரூபா அபராதமும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு