சட்டமூலம் தொடர்பில் மாற்றுக் கருத்து கூறும் அதிகாரம் இல்லை – தவராசா


Sஇலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் சட்டமூலமொன்றை மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக அனுப்பியிருந்தால் அது தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை சொல்லும் அதிகாரம் இல்லை என்று வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா கூறியுள்ளார்.

அந்த சட்டமூலத்தை ஏற்கின்றோமா அல்லது அதனை நிராகரிக்கின்றோமா என்பதை மாத்திரமே கூற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் 105 வது அமர்வு இன்று வியாழக்கிழமை (07) அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 20 வது திருத்தச் சட்டமூலத்தை வடமாகாண சபை நிராகரிப்பதாகவும், அதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால் அது தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பின்னர் இது தொடர்பில் அத தெரண செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்கும் போது வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா இவ்வாறு கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு