நிர்மாணிக்கப்பட்டு வரும் பாதுகாப்புத் தலைமையகத்தை ஜனாதிபதி பார்வையிட்டாா்


 hevisitaku_11ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அகுரேஹொடவில் புதிதாக நிர்மாணித்து வரும் பாதுகாப்பு தலைமையகங்களை (5)ஆம் திகதி செவ்வாய்க கிழமை பார்வையிட்டார். அவருடன் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ மற்றும் இராணுவ தளபதி லெப்டினனன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அபர்களும் அந்த இடத்திற்கு சென்றனர்.

இந்த வளாகத்தினுள் முப்படையினர்களுக்காக அமைத்து வரும் புதிய கட்டிடங்கள் மற்றும் தொழில் நுட்ப ரீதியான நிர்மாணிப்பு தொடர்பாகவும் பார்வையிட்டதோடு, ஜனாதிபதியினால் இராணுவ தளபதிக்கு இந்த கட்டிட நிர்மாணிப்புக்கள் சாதகமான முறையில் விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.

இறுதியில்  ஜனாதிபதி இந்த பாதுகாப்பு தலைமையக கட்டிட நிர்மாண மேற்பார்வை இராணுவ சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு