500 கிலோ விமான குண்டு செயலிழக்க முகமாலையில் மக்கள் ஒரு மணித்தியாலயத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.


21476186_1896068797322116_616607970_nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி முகமாலை பிரதேசத்தை அண்டிய இந்திராபுரம், செல்வபுரம், வேம்பொடுகேணி பிரதேசங்களில் இருந்து ஒரு மணித்தியாலயத்திற்கு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா்

வேம்பொடுகேணி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோ கிராம் எடையுள்ள விமானக் குண்டு ஒன்றை செயலிழக்க செய்யும் வகையில் மேற்குறித்த பிரதேசங்களில் இருந்து ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் பாதுகாப்பு கருதி பிற்பகல் மூன்று மணி முதல் நான்கு வரை மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா்.
குறித்த பிரதேசத்தில்  உள்ள விமானக் குண்டை அதே இடத்தில் செயழைக்கச் செய்யவதற்கு விமானப்படை, ஹலோ ட்ரஸ்ட் கண்ணி வெடி அகற்றும் நிறுவனம், மற்றும் பொலீஸாா் ஆகியோா் ஈடுப்பட்டிருந்தனர்
பாரியளவிலான மண் அணை சுற்றி   அமைக்கப்பட்டு  இன்று (07) பிற்பகல் மூன்று முப்பது மணிக்கு  குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு