ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு


2058362570වංචා සෙවීම_135855790013988845494Prisedenatal_Inquries_Lபாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணைச் செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் கால எல்லை கடந்த 3 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் ,அதனை மேலும் நீடிக்குமாறு ஆணைக்குழுவின் செயலாளர்  எம்.டபிள்யு. குணதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் நிறைவுப்பெறாமல் இருப்பதன் காரணதமாகவே கால எல்லையை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கமைய கால எல்லை மேலும் மூன்று மாதங்கள்  நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 2000 ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர்  எம்.டபிள்யு. குணதாச தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் ஆணைக்குழுவின் கால எல்லை ஜனாதிபதியினால் இரு தடவைகள் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு