வடக்கு மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக் கலாச்சாரத்துடன் தொடர்புபட்டது – பூஜித ஜெயசுந்தர


downloadவடக்கு மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக் கலாச்சாரத்துடன் தொடர்புபட்டது. அந்த மக்கள் கல்வி கற்றது, வளர்ந்தது அனைத்தும் ஆயுதக் கலாச்சாரத்திலேயே. அம்மக்கள் வெடிபொருட்களைப் பயன்படுத்தியவர்கள். ஆகையால் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அங்கு இடம்பெற்ற சம்பவங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தேன் என சிறிலங்கா காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் சாதாரணமானவையா அல்லது பாரதூரமானவையா என ஊடகமொன்றினால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற பின்னணி தொடர்பாக நாம் கரிசனை கொண்டால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு தற்போது ஒன்பது , பத்து வருடங்களே கழிந்துள்ளன.

நாம் இது பற்றிச் சிந்திக்கவேண்டும். அங்குவாழும் பொதுமக்கள் மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் தொடர்பிலும் கரிசனை கொள்ளவேண்டும்.

அவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களா? இல்லை. பல வருடகாலமாக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள் இப்போதும் அங்குள்ளன.

அம்மக்கள் கல்வி கற்றது, வளர்ந்தது அனைத்தும் ஆயுதக் கலாச்சாரத்திற்குள்ளேயே. அவர்கள் வெடிபொருட்களைப் பயன்படுத்தியவர்கள்.

அவர்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக் கலாச்சாரத்துடன் தொடர்புபட்டவையே. இந்த நிலமையை மாற்றுவதற்கு நான் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்தேன். இது தொடர்பில் அறிக்கையிட்டேன்.

இது தொடர்பில் படை அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். அவர்களின் ஆலோசனைக்கமையவும், ஆயுதப் படையினருடனும் இணைந்து நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு