சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக சானி அபேசேகர!


national-police-commission2-720x480சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக, சானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த, சிசிர மென்டிசுக்கு அண்மையில் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய சிசிர மென்டிசுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டமைக்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த நிலையிலேயே, அவருக்குப் பதிலாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக சானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு