ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக பல பிரதேசங்களில் போராட்டங்கள்


357088576protest-for-rohingyaரோஹிங்யா மக்களுக்கு எதிராக மியன்மார் அரசும், அந்நாட்டின் தீவிரவாத அமைப்புக்களும் மேற்கொள்கின்ற அரச பயங்கரவாதமும், இனச்சுத்திகரிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன.

குறிப்பாக நாட்டின் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் போராட்டங்கள் இடம்பெற்றன.

இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிறுபான்மை சமூக அரசியல்வாதிகள் எந்தவித வேறுபாடுகளின்றி இதற்கு உரிய நடவடிக்கைகளை பெற்றுத்தர முன்வர வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டங்களின் போது மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சாங் சுசியின் கொடும்பாவி எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மியான்மரின் ரகைன் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தாக்குதல் நடவடிக்கை காரணமாக, சுமார் 164,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த நாட்டின் இராணுவமும் ரகைன் பெளத்தர்களும் தங்களை விரட்டியடிப்பதற்காக, தங்கள் கிராமங்களை அழித்து வருவதாக ரோஹிங்யா மக்கள் கூறுகிறார்கள்.

இதேவேளை ந்த நாட்டில் இருந்து பல்லாயிரக் கணக்கில் அகதிகளாக வெளியேறும் ரோஹிஞ்சா முஸ்லிம்களை சர்வதேச சமூகம் தலையிட்டு் பாதுகாக்கவேண்டும் என்று பெண் கல்வி உரிமைக்குக் குரல் கொடுத்துப் புகழ் பெற்ற மலாலா யூசுஃப்சாய் கோரியுள்ளார்.

உங்கள் கருத்து
 1. A Kafir on September 8, 2017 7:08 pm

  ரோஹிங்ய முஸ்லிம்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் மதவாத பாசம்.


 2. Paarathy on September 9, 2017 3:26 pm

  சொந்த நாட்டில் சொந்த மொழிபேசும் மக்கள் பௌத்த மேலாதிக்க அடிப்படைவாதிகளால் ஆயிரம் ஆயிரமாய் அழிக்கப்பட்டு அனாதைகள் ஆக்கப்பட்டு அகதிகளாய் ஓடியபோது அல்லாஹ்வின் புதல்வர்கள் பௌத்த பேரினவாதத்துடன் கைகோர்த்து ஊர்வலம் வந்த காட்சி எண்கள் கண்முன்னே நிற்கிறது. ஏன் சொந்த மொழி, சொந்த மத மக்களை பௌத்த பேரினவாதம் முட்டி மோதியபோதும் அல்லாஹ்வின் புதல்வர்கள் மௌனமாக அந்த பேரினவாதத்துடன் இணைந்தே இருந்தனர். ஆனால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அந்நியதேசத்தில் எதோ புரியாத மொழிபேசும் மக்களை பௌத்த பேரினவாதம் பயங்கரவாதிகள் என்று அடித்து துரத்தும் பொது எமக்கு பாசம் கொட்டுகிறது. இரண்டு மதவாதங்கள் முட்டி மோதும் போது எந்த மதவாதம் உயர்ந்தது என்பது அவர்கள் அழிக்கும் மக்களின் எண்ணிக்கையிலா, அவர்கள் உடைக்கும் பள்ளிவாசல்கள்யா, அல்லது நிர்மூலமாக்கும் வியாபார நிலங்களின் எண்ணிக்கையிலா இருக்கிறது.


 3. yannick on September 10, 2017 5:13 am

  இது ஒரு கொடுமையான விசயந்தான். ஆனால்இதற்கு மட்டும் ‘சர்வதேச சமூகம் தலையிட்டு் பாதுகாக்கவேண்டும்’. பணதில் மிதக்கும் அரபுநாட்டுக் கணவான்கள் நினைத்தால் ஒரு மாதத்திலேயே இந்தப் பிரச்சனையை முடிக்கமுயும். ஒன்று மட்டும் நிச்சயம் ஆங் சாங் சுசி – மகிந்த எல்லாம் ஒரே வகை.

  பத்மபாலன்


 4. Mohamed SR. Nisthar on September 10, 2017 11:22 am

  இனவாதம், மொழிவாதம், சாதிவாதம் என்ற வரிசையில் மதவாதம் என்ற ஒன்று இருப்பதை சுருக்கமாக சுட்டிக்காட்டா முனைந்தாலும், (இந்த மனிதனின்(?)) மனிதம் அற்ற தன்மையையே விரிவாக படம்பிடித்து காட்டுக்கிறது A.Kafir ரின் அல்லது a Kafir ரின் பின்னூட்டம்.


 5. BC on September 11, 2017 1:32 pm

  எங்கேயோ உள்ள ரோஹிங்யாவை பற்றி என்ற உடனேயே தேசம்நெற் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதற்கான ஒரு ஜனநாயக தளமாகிவிட்டது சந்தோசம்.
  ஆனால் புலி புலி தலைவரை பற்றி கருத்து தெரிப்பதானால் மட்டும் எதிர் கருத்து தெரிவிப்பவர்களுக்கு தனிநபர் வசைபாடல்.
  புலி புலி தலைவரை பற்றி ஜிஞ்சா சத்தங்களாலேயே தமிழ் பேசுபவர்கள் காதுகள் நிறைவடை வேண்டும் என்ற புலிகளின் சர்வாதிகார சிந்தனைகள்.

  கறுப்பன் புலியை விட்டால் சீதனம் போன்ற சமூக விடயங்களில் ஆரோக்கியமான சிந்தனைகள் கொண்டவர்.
  ஆரோக்கியமான சிந்தனைகள் கொண்ட எங்கட நிஸ்தார். ஆனால் முஸ்லிம் மதம் என்றால் வேதாளமாக மாறிவிடுவார்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு