அரசியலமைப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியீடு!


tna-300x200-300x200வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான அதிகூடிய அதிகாரப் பகிர்விலான தீர்வு அவசியம் என புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையுடன் இணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையுடன் ஒவ்வொரு கட்சியும் ஒரு இணை அறிக்கையை இணைத்துள்ளது.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றபோது, எதிர்க்கட்சித் தலைவரினால் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில், மாகாண ஆளுநருக்கு அதிகூடிய அதிகாரங்களை இல்லாமல் செய்யவேண்டுமெனவும், மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திரும்பப் பெறப்படாமலும், நாடாளுமன்றத்தினால் பிரயோகிக்கப்படாமலும் இருக்கவேண்டும்.

அத்துடன், இதற்காக இரண்டாவது சபையொன்றும் நிறுவப்படவேண்டுமெனவும், அந்தச் சபைக்கு மாகாணங்கள் சார்பாக பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்பு விவகாரங்கள், சர்ச்சைகள், பொருள் கோடல் போன்றவற்றில் முடிவுகளை எடுப்பதற்காக அரசமைப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளிவருவதற்கு முன்னர் இணை அறிக்கையை வெளியிடுவதற்கு இரா.சம்பந்தன் மறுப்புத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு