20 வது திருத்தச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்ற தீர்மானம் விரைவில்


Supreme-Courtசிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான தமது தீர்மானத்தை உச்சநீதிமன்றம் விரைவில் அறிவிக்கவுள்ளது.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பிரியசாத் டெப், மற்றும் நீதியரசர்கள் அனில் குணதிலக,  விஜித் மலல்கொட ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த மனுக்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு குறித்த உச்சநீதிமன்றத்தின் முடிவு சபாநாயகருக்கும், அதிபருக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரியவருகிறது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு