மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அரசியல் செய்தகாலம் மலையேறிவிட்டது- கிழக்கு முதலமைச்சர்


a«òa«¦a«¦a»ì-a«¬a»ïa«ƒa»ìa«ƒa»ï-min1மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் விதத்தில் பேசி அரசியல் செய்ய நினைத்த காலம் மலையேறி விட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

தற்போது சிறுபான்மை சமூகம் சாணக்கியமாக செயற்பட்டு உரிமைகளை வென்றெடுக்கும் காலம் உதயமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உத்தேச அரசியமைப்புத் திருத்தத்தின் ஊடாக சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுத்து அவர்களுக்கு அரசியல் விடுதலையினைப் பெற்றுக்கொடுக்க எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் மிகவும் சாணக்கியமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – வந்தாறூமூலையில் சனிக்கிழமையன்று பொது நூலகம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், வெறும் சமூக மற்றும் இன ரீதியான உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களின் ஊடாக மக்களை ஏமாற்றலாம் என நினைத்து சிலர் அரசியலை முன்னெடுக்க முயல்கின்றனர்,

ஆனால் அவற்றுக்கெல்லாம் ஏமாறுவதற்கு மக்கள் இனி மேலும் தயாராக இல்லையென்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவற்றையெல்லாம் முறியடித்து இன்று கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நல்லிணக்கத்துடன் மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை பிரதேச மற்றும் இன ரீதியான பாகுபாடின்றி சம்மாக பங்கீடுசெய்து அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது.

இன்று கிழக்கின் நிலைமைகளே தெரியாமல் சிலர் நல்லிணக்கத்தை வளர்ப்பதாக்க கூறி இங்கு தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயல்கின்றனர்.

மாகாண சபைகள் நிதிகளை பெற்றுக் கொள்ளபடும் சிரமங்கள் மற்றும் ஒதுக்கப்படும் நிதிகள் தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் உள்ளவர்கள் அறிந்திருக்கின்றார்களா என்ற சந்தேகம் தோன்றுகின்றது.

சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் செய்வதாக கூறுபவர்கள் நிதி ஒதுக்கீடுகளில் கிழக்கு மாகாண சபை புறக்கணிக்கப்படுவதை அறிந்திருக்க வேண்டும்,

ஆகவே நாமும் எமது தனிப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடுகளில் கூட இனங்களுக்கும் பிரதேசங்களுக்கும் சம்மாக ஒதுக்கீடு செய்து அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம்.

ஆகவே, இங்கு வந்து தமது தனிப்பட்ட அரசியலை முன்னெடுக்க பிளவுகளை ஏற்படுத்த முனையாமல் சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கிற்கு அதிக நிதிகளை ஒதுக்க மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து அங்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைய வேண்டும்.

இன்று நாம் தமிழ் சகோதரர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நாசிவன் தீவு, இழுப்பத்தடிச்சனை, களுவான்கேணி மற்றும் வந்தாறு மூலை ஆகிய பகுதிகளில் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் வாசிகசாலை திறந்து வைத்துள்ளோம்,

ஆகவே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பிரதேச இன பாகுபாடின்றி அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம்,

இன்று மாகாணத்தில் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு