அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் கடற்படைத் தளபதியை சந்தித்துள்ளனர்


1 (1)இலங்கையின் ஐக்கிய அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கேணல்  டக்ளஸ் சி. ஹீஸ்  கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா நேற்று முன்தினம்  கடற்படை தலைமையகத்தில் கலந்துரையாடியதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன் போது  ஐக்கிய அமெரிக்கா கடற்படையின் லெப்டினென்ட் கமாண்டர் பிரையன் எஸ் பேஜ்யும் கலந்துகொண்டார்

இதேவேளை நேற்று முன்தினம்  இலங்கையின் இராணுவ, விமான மற்றும் கடற்படை விவகாரங்கள் பற்றிய சீனாவின் சிரேஸ்ட  பாதுகாப்பு ஆலோசகர் கேணல்  ஷு ஜியேன்வெய்  கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா ) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளாா்

அமெரிக்க மற்றும் சீன  பாதுகாப்பு ஆலோசகர்கள்  புதிய கடற்படைத் தளபதிக்கு   தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு.  இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட பாதுகாப்பு  விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

3 2

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு