மகிந்தவைக் காட்டி தீர்வை இழுத்தடிக்கின்றனர் – வடமாகாண முதலமைச்சர்!


1504492221மகிந்த மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார் எனக் கூறி, அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை இழுத்தடித்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ‘தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்துவிட்டால், மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றி விடுவார் என்று அரசாங்கம் இன்னமும் அஞ்சுகிறது. இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது.

அவர்கள் எங்களுடன் பேசும்போது நன்றாகவே பேசுகின்றனர். ஆமாம், ஆமாம் எனத் தலையாட்டுகின்றனர்.

பின்னர், எதனையும் நீங்கள் செய்யவில்லையே எனக் கேட்டால், நாங்கள் மெதுவாகவே நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. இல்லாவிட்டால் மகிந்த ராஜபக்ஷ ஆட்சியைக் கைப்பற்றிவிடுவார் என்கிறார்கள்.

நேற்று, மல்வத்துபீட மகாநாயக்க தேரர் எந்த வித அரசியல் நோக்கமும் இன்றி உரையாடினார். வடக்கு மக்களின் பிரச்சனை பற்றிப் பேசினார்.

அவர் அரசியல் பேச விரும்பவில்லை. மனித நேயத்துடன் உரையாடினார். அவர் மிக நன்றாக உரையாடினார். அவரைப்போலவே பௌத்த பிக்குகள் இருக்கவேண்டுமென நான் நினைக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு