எனது உத்தரவுக்கு அமைய செயற்பட்டதனாலேயே லலித்துக்கு இந்த நிலை – மகிந்த ராஜபக்ஷ


mahinda12லலித் வீர­துங்­க­வுக்கு எதி­ராக வழங்­கப்­பட்ட தீர்ப்­பா­னது அர­சியல் பழி­வாங்­க­லாகும். எனது உத்­த­ர­வுக்கு அமைய செயற்­பட்­ட­த­னா­லேயே இந்த நிலை ஏற்­பட்­டது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

அத்­துடன் அர­சாங்­கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் சிலர் கூட்டு எதிர்க்­கட்­சியில் இணைந்­து­கொள்­வ­தாக தெரி­வித்­துள்­ளனர் எனவும்  அவர் தெரி­வித்தார். குரு­ணா­க­லையில் நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில் அரச அதி­கா­ரிகள் மிகவும் அவ­தா­ன­மாக நடந்­து­கொள்­ள­ வேண்டும்.  அரச கொள்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே   சில் துணி வழங்­கப்­பட்­டது. மாறாக தேர்தல் பிர­சா­ரத்­துக்­காக வழங்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும், அதனை பாது­காக்­க­வேண்டும் என தெளி­வாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதன் பிர­கா­ரமே விகா­ரைக்கு வரு­ப­வர்­க­ளுக்கு சில் ஆடை வழங்கி மதத்தை போஷிக்க எனது அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தது. அதனைய தவறு என்று யாரும் கூற­மாட்­டார்கள்.

மேலும் அர­சாங்­கத்தின் கொள்­கையை நிறை­வேற்­று­மாறு அதி­கா­ரிக்கு தெரி­விப்­பது எனது கடமை. அத­னையே லலித் வீர­துங்­க­விடம் நான் தெரி­வித்தேன். என்னால் வழங்­கப்­பட்ட உத்­த­ரவை செயற்­ப­டுத்­தி­ய­த­னா­லேயே  அவர் கைது ­செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்ளார். அதனால் அவரின் கைதா­னது அர­சியல் பழி­வாங்கும் நோக்­கத்தில் மேற்­கொள்­ளப்­பட்­ட­தொன்­றாகும்.

அத்­துடன் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்­கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர். அதனால் அவர்களில் ஒரு பிரிவினர் எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளனர். அதற்கான உறுதியை அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு