கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்திற்கு பின்னர் ஆறு இலட்சத்து 62 ஆயிரத்து 839 வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.


IMG_1637

யுத்தம்  முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 2011 கண்ணி  வெடி அகற்றும் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை ஆறு இலட்சத்து 62 ஆயிரத்து 839 வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. என  மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்ட முழுவதும் பல்வேறு பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பல நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவா்களால் இதுவரைக்கும் மிதிவெடிகள், வாகன வெடிகள், சிறிய ரக வெடிப்பொருட்கள், வெடிக்காத வெடி பொருட்கள் என்பனவே மீட்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 815   மிதிவெடிகள், இதில் பச்சிலைப்பள்ளியில் 64494 மிதிவெடிகளும், கரைச்சியில் 44184 மிதிவெடிகளும், கண்டாவளையில் 12014 மிதிவெடிகளும்,பூநகரியில் 7123 மிதிவெடிகளும் மீட்கப்பட்டுள்ளன.
அத்தோடு    மூன்று இலட்சத்து 18 ஆயிரத்து 794  சிறியரக வெடிப்பொருட்களும்,  இரண்டு இலட்சத்து 15 ஆயிரத்து 550 வெடிக்காத  வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதோடு, வாகன வெடிப்பொருட்கள் 667 மீட்கப்பட்டுள்ளன.
இதில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலேயே அதிகளவு வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசத்தில் கடும் யுத்தம் நிலவிய முகமாலை முன்னரங்க பிரதேசம் காணப்பட்டமையினால்  அதிகளவு வெடிப்பொருட்கள்  மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை இதுவரைக்கும் 11607005 சதுர மீற்றர் பரப்பளவு பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதோடு, தற்போது 9333766 சதுர மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும்,3239227   சதுர மீற்றர் பரப்பளவில் கண்ணி வெடிகள் அகற்ற வேண்டியுள்ளது எனவும் மாவட்டச ் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு