கிளிநொச்சி சந்தை கட்டடம் தொடர்பில் வர்த்தகர்கள் ஆளுநருடன் சந்திப்பு


DSC_0589
கிளிநொச்சி சேவை சந்தையில் அமைக்கப்படவுள்ள புதிய  கடைத் தொகுதி தொடர்பில் சேவை சந்தை வர்த்தகர்கள் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனா்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் சந்தை வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆளுநரை சந்தித்து தமது கோரிக்கையை  முன்வைத்துள்ளனா்.
இது தொடர்பில்  ஆளுநருக்கு வா்த்தகர்கள் வழங்கிய எழுத்து மூலமான  கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
கடந்த 16-09-2016 அன்று எமது சேவைச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தத்தால் எமது சந்தையில் பல  வியாபார நிலையங்கள் உட்பட பொருட்கள் யாவும் முற்றுமுழுதாக அழிவடைந்தது யாவரும் அறிந்தது.
 அதற்காக பிரத்தியோகமாக தாங்களின் மத்திய அரசுடனான அதீத முயற்சியால் மீளவும் தற்காலிக வியாபார நிலையங்களும், அதற்கான நட்ட ஈட்டுத் தொகையும் கிடைக்கப்பெற்று பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரம்  ஓரளவு மேம்பாடடைந்தது. அக்காலப் பகுதியில் தாங்களும் மத்திய அரசின் அமைச்சர்களும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக நிரந்தர கட்டடத் தொகுதிக்கான நிதி 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இதில் முதல் கட்ட வேலைக்காக இவ்வருடம் 80 மில்லியன் கிடைக்கப்பெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் தங்களை நாம் சந்தித்து யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தை கட்டடம் போன்று   கிளிநொச்சியிலும் ஏ9 வீதி மற்றும் கனகபுரம் வீதியையும் பார்வையாக கெண்ட ஒரு நிரந்தர கட்டத்திற்கான திட்ட மாதிரியை முன்வைத்திருந்தோம். அத் திட்ட மாதிரிக்கு தாங்களும் ஆதரவு தெரிவித்திருந்தீர்கள்.
இத்திட்ட மாதிரி தற்போது மாற்றப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம் எனவே நாம் முன்னர் சமர்பித்த யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தை கட்டடம் போன்று எமது நிரந்தர கட்டடத்தை அமைப்பதற்கு தாங்கள் ஆவண செய்து தருமாறு வர்த்தகர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதன் போது பதிலளித்த ஆளுநர் தான் அமைச்சர்களான சுவாமிநாதன், பைசர் முஸ்தபா, பட்டாலி சம்பிக்க ரணவக்க ஆகியோருடன் பேசி  வர்த்தகர்கள் பாதிக்கப்படாத வகையில் பொருத்தமான  தீர்வை பெற்றுத் தருவதாக தெரிவித்ததாக சேவை சந்தையின் வர்த்தகர்கள் குறிப்பிட்டனா்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு