சமஷ்டி முறைக்கே இடமில்லை – அஸ்கிரிய பீடம்


medagama-dhammanandaநாட்டில் சமஷ்டி முறையிலான தீர்வுக்கு இடமேயில்லையென அஸ்கிரிய பீடம் அறிவித்துள்ளது.

சமஷ்டி முறையானது நாட்டை பிள­வு­ப­டுத்தி பிரி­வி­னை­வா­தத்தை தோற்­று­விக்­காது என்­பதில் தமக்கு நம்பிக்கையில்லையெனவும் ஒற்­றை­யாட்­சிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய எந்­த­வொரு அர­சியல் அதி­கார கோரிக்­கைக்கும் தாம் அங்­கீகாரம் வழங்க முடி­யாது எனவும் அஸ்கிரிய பீடம் அறிவித்துள்ளது. அத்துடன் வடக்கு மாகா­ணத்­திற்கு கூடுதல் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்டால் மலை­யகம் அடுத்தபடியாக போர்க்கொடி தூக்கும் எனவும் அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செய­லாளர் மெத­கம தம்­மா­னந்த அநு­நா­யக்க தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டியிலுள்ள அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் தமது நிலைப்பாடு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாம் அண்மையில் வடக்கிற்குப் பயணம்மேற்கொண்டபோது, அரசியல் அதிகாரங்களைப் பெறுவதில் காட்டும் ஆர்வம், மக்களின் அடிப்படைப் பிரச்சனையைத் தீர்ப்பதில் காண்பிக்கப்படவில்லையென்பதை அறிந்துகொண்டோம்.

வடமாகாணத்தின் முதலமைச்சர் நான்கு வருடங்கள் கழித்து எங்களை வந்து சந்தித்துள்ளார். காலங் கடந்த சந்திப்பென்றாலும் மகிழ்ச்சியளிக்கின்றது. அவரை நாம் முதலமைச்சராகப் பார்க்காது நீதியரசராகவே பார்க்கின்றோம்.

அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்கள் கடந்த வாரத்தில் வடக்­கிற்கு விஜயம் செய்­தி­ருந்­தன. வடக்கில் சில பகு­தி­களில் மக்­களின் வாழ்வு மிகவும் மோச­மான நிலையில் காணப்­ப­டு­கின்­றது. அதனை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. போர் முடிந்த பின்னர் அந்த மக்கள் அனைத்து வகை­யிலும் சிறப்­பு­டனும் பாதுகாப்­பு­டனும் வாழ வேண்டும் என்­பதே மஹா­சங்­கத்­தி­னரின் எதிர்­பார்ப்பு. அந்த வகையில் வடக்கு மக்­களின் வாழ்­வ­தார விட­யங்­களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்ற வலி­யு­றுத்­தலை அர­சாங்­கத்­திற்கு வழங்க உள்ளோம்.

அதே­போன்று அர­சாங்­கத்தின் நிதி உரிய வகையில் வடக்கு மாகா­ணத்­திற்கு கிடைப்­ப­தில்லை என்று முத­ல­மைச்சர் விக்­ணேஷ்­வரன் குறிப்­பிட்டார். அந்த விடயம் குறித்து அர­சாங்­கத்­திற்கு விஷே­ட­மாக தெரி­யப்­ப­டுத்த உள்ளோம். ஒரே நாட்டில் வாழ்­கின்ற மக்கள் அரசின் திட்­டங்­களில் சரி­நி­க­ராக பயன்­பெற வேண்டும். அவற்றில் வேறு­பா­டுகள் ஏற்­படும் போது தான் அநா­வ­சி­ய­மான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன. எனவே மக்­களின் நலன்கள் விட­யத்தில் அரசாங்கம் முன்­னு­ரி­மை­யுடன் சிந்­திக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் மாற்­ற­மில்லை.

அதே போன்று அர­சியல் அதி­கார விட­யங்­களில் எப்­போதும் நாட்டில் இது­வ­ரைக்­கா­லமும் காணப்­பட்ட ஒற்­றை­யாட்­சிக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் செயற்­பட வேண்டும். சமஷ்டி முறை­மை­யினால் இலங்கை பிள­வு­ப­டாது என்று முத­ல­மைச்சர் விக்­ணேஷ்­வரன் உள்­ளிட்ட சில அர­சி­யல்­வா­திகள் கூறு­கின்றனர். மாகாண சபை­க­ளுக்கு ஏற்­க­னவே அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே சமஷ்டி முறை­மையை நாட்­டிற்குள் கொண்டு வந்து மேலும் அதிகா­ரத்­திற்குள் முரண்­பட்டு அமை­தி­யின்­மையை உருவாக் முயற்­சிக்ககூடாது.

ஏனைய மாகா­ணங்­களை போன்று வடக்கு மாகா­ணமும் அர­சாங்­கத்­துடன் ஒரு­மித்து பய­ணிக்க வேண்டும். சமஷ்டி முறைமை நாட்டை பிள­வுப்­ப­டுத்தி பிரிவி­னை­வா­தத்தை தோற்­று­விக்­காது என்­பதில் நம்­பிக்கை வைக்க முடி­யாது. எனவே உலக நாடு­களின் ஆட்சி முறை­மையை இலங்­கை­யுடன் ஒப்­பிட்டு கூறு­வதும் ஏற்­பு­டை­ய­தல்ல. வடக்­கிற்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்டால் மலை­ய­கமும் போர் கொடி தூக்கும். எனவே அநா­வ­சி­ய­மான பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சி­யல்­வா­திகள் கார­ண­மாகி விட­கூ­டாது.

நாட்டின் நிலை­யான அமைதி மற்றும் அனைத்து மக்­க­ளி­னதும் நல்­லி­ணக்கம் என்­பதே முக்­கி­ய­மான விடயமாகும். பொது மக்களின் அடிப்படை விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி செயற்பட வேண்டும். அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதில் காட்டப்படும் ஆர்வம் மக்களின் அடிப்படை குறைகளை தீர்ப்பதில் காட்டப்படவில்லை என்பதை வடக்கு விஜயத்தில் எம்மால்உணர கூடியதாக இருந்தது.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய உள்ளிட்ட மஹா சங்கத்தினர் அனைத்து இன மக்களுக்கும் சமமான நிலையிலேயே நோக்குகின்றனர் என தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு