கிழக்கு மாகாண அபிவிருத்தியில் தமிழர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் – மனோகணேசனின் குற்றச்சாட்டை நிராகரித்தார் நசீர் அகமட்


hafees2கிழக்கு மாகாணத்தில் தமிழ் – முஸ்லிம் உறவு சீரில்லையெனவும், அங்கு தமிழ் மக்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுகின்றனர் எனவும் இது தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டுமெனவும் அண்மையில் கிழக்குமாகாணத்துக்கு பயணம்மேற்கொண்டபின்னர் அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியிருந்தார்.

அமைச்சர் மனோகணேசனின் குற்றச்சாட்டை  கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் நிராகரித்துள்ளார். அத்துடன், அமைச்சர் மனோகணேசன் தான் சுமத்திய குற்றச்சாட்டை  நிரூபிக்கமுடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு மாகாண அபிவிருத்தியில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் எனக் கூறுபவர்கள் இனவாதத்தைத் தூண்டி அரசியல் செய்யும் கலாச்சாரத்திலிருந்து இன்னும் விடுபடவில்லையெனக் குற்றஞ்சாட்டினார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் இக்குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதற்கு தனக்கு நேரமில்லையெனவும் பொறுப்பான கிழக்கு மாகாண மக்களைப் பதில் கூறுமாறு அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு