வித்தியா கொலை வழக்கு – 27 ஆம் திகதி தீர்ப்பு


punkuduthivu-vithyaபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் நடைபெற்று  இன்று எதிரிகள் தரப்பு தொகுப்புரைக்காக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ட்ரயல்-அட்பார் ) கூடியது. அதன்போதே இறுதி தீர்ப்பு திகதியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்யா கொலை வழக்கு பரபரப்பான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுநர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் நேற்று வழக்கு தொடுநர் தரப்பு தொகுப்புரை இடம்பெற்றது.

அதன் போது வழக்கு தொடுநர் தரப்பின் தொகுப்புரையினை பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில் நிகழ்த்தினார். அதன் போது , இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எதிரிகளாக கண்ட ஒன்பது பேரில் முதலாம், ஏழாம் எதிரிகளுக்கு எதிரான குற்ற சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. அதற்கான போதிய சாட்சி ஆதாரங்கள் இல்லை. ஏனைய 7 எதிரிகள் மீதான குற்ற சாட்டுக்கள் அனைத்தும் வழக்கு தொடுநர் தரப்பு சாட்சியங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரை இன்று நடைபெற்றது. அதன்போது எதிரிகள் தரப்பு  சட்டத்தரணிகள் இந்த குற்றத்திற்கும் தமது கட்சி காரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை நிரபராதிகள் தண்டிக்க கூடாது. என குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து வழக்கு முடிவுறுத்தப்பட்டு தீர்ப்புத் திகதி அறிவிக்கப்பட்டது.

மாணவி வித்யா 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி காணாமல் போயிருந்து நிலையில் மறுநாள் 14 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இரண்டு வருடங்களாக வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ட்ரயல்-அட்பார் முறையில் வழக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கென மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அறிவிக்கப்பட்டது. முதலாவது ட்டரயல்-அட்பார் விசாரணை ஜூன் 12 ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்நிலையில் சுமார் நான்கு மாத ட்ரயல்-அட்பார் விசாரணைகளின் நிறைவில் எதிர்வரும் 27 ஆம் திகதி தீர்ப்பு வெளியிடப்படவுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு