சுவிஸ்குமாருடன் தலைவர் பிரபாகரனை ஒப்பிட்ட இளஞ்செழியன்


84429898Ilancheliyanபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் சம்பவம் நடைபெற்றபோது அவ்விடத்தில் இருக்கவில்லையென எதிரிதரப்பு சட்டத்தரணி தெரிவித்ததற்கு குற்றத்தைப் புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனத் தெரிவித்த இளஞ்செழியன் இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை நேரடியாக அனுப்பி வைத்தவர் பிரபாகரன் எனவும் அவர் சம்பவ இடத்தில் இருக்கவில்லையெனச் சுட்டிக்காட்டினார்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப்பாலியல் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று எதிரி தரப்பு தொகுப்புரை இடம்பெற்றது.

பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளான மஹிந்த ஜயவர்தன, ஆறுமுகம் ரகுபதி மற்றும் கேதீஸ்வரன் ஆகியோர் இன்று தமது தொகுப்புரைகளை வழங்கியிருந்தனர்.

பிரதிவாதிகளின் தொகுப்புரையின்போது,

சந்தேகநபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது கட்சிக்காரர்களை விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவத்துடன் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் கூறியுள்ளனர்.

வழக்கில் சாட்சியமளித்த மாப்பிள்ளை எனப்படும் நடராசா குகநேசன் என்பவர் பிரதிவாதிகளுடன் கைது செய்யப்பட வேண்டியவர் எனினும், அவர் அரச தரப்பில் சாட்சியமளித்துள்ளமை தவறான விடயம் எனவும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச தரப்பு சாட்சியாளர் உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியங்கள் நம்பத்தகுந்தவை அல்ல எனவும் பிரதிவாதிகள் தரப்பு தொகுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்புக்கண்ணாடி அணிந்து கொண்டு சுவிஸ்குமார் வித்தியாவை பார்த்தார் என யாராலும் கூற முடியாது எனவும், கறுப்புக்கண்ணாடி போட்டிருக்கும் ஒருவர் யாரைப் பார்க்கிறார் என்பது தெரியாது எனவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், கறுப்புக்கண்ணாடி ஒன்றை அணிந்து மன்றில் சட்டத்தரணி கேதீஸ்வரன் பாவனை செய்து காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், ஏழாவது சாட்சியமாக சாட்சி வழங்கிய இலங்கேஸ்வரனின் சாட்சியங்கள் பொய்யானவை எனவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர்களை விடுதலை செய்யுமாறும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது, நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், சட்டத்தரணி கேதீஸ்வரனை மீண்டும் அந்த கறுப்புக்கண்ணாடியை அணியுமாறும், பார்வையாளர் ஒருவரிடம் சட்டத்தரணி எதனை நோக்கிப் பார்க்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டத்தரணி நீதிபதிபகளை நோக்குகிறார் என பார்வையாளர் பதில் வழங்கிய போது, ஒருவர் கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு குறிப்பாக எதை நோக்குகின்றார் என கூற முடியாது என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கூறியுள்ளார்.

எனினும், கண்ணாடி அணிந்திருப்பவர் திரும்பும் திசையை வைத்து எதைப் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, குறித்த கறுப்புக்கண்ணாடியை நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனும் அணிந்து பாவனை செய்து காட்டியுள்ளார்.

குற்றம் இடம்பெறுவற்கு முன்னரும், அதன் பின்னருமான நடத்தைகளில் 4,7, 8, 9 ஆகிய பிரதிவாதிகளுடன் 5 ஆம் இலக்க பிரதிவாதி கூட்டாகவே இருந்துள்ளார் என சாட்சியங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2015 மே மாதம் 12 ஆம் திகதி காலை 11 மணியளவில் 5 ஆம் இலக்க பிரதிவாதி, ஏனைய பிரதிவாதிகளுடன் ஹயஸ் வாகனத்தில் இருந்துள்ளமை தொடர்பில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்தக் குற்றத்தைப் புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை நேரடியாக அனுப்பி வைத்தவர் பிரபாகரன் என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பிரபாகரனுக்கு கொழும்பு தெரியாது. கொழும்பைப் பார்க்காத பிரபாகரன், சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாவது சந்தேகநபர் என்பதால், இலங்கையின் நீதிமன்றத்தால் அவருக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

எனவே, சதித்திட்டம் தீட்டிய சூத்திரதாரி சம்பவ இடத்திற்கு நேரடியாக வரவேண்டும் என அவசியம் இல்லை எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய இம்மாதம் 27 ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

உங்கள் கருத்து
 1. JEMS-BOND on September 15, 2017 9:05 pm

  அப்படி என்றால் சுவிஸ் குமார் தலையும் பிரபாகரன் தலைபோல் கோடாலியால் கொத்தப்படவேண்டும் ,

  பின்குறிப்பு::::: எனது விருப்பமும் அதுதான் . ஏனெனில் இனியும் தமிழின தேச துரோகிகள் உசிரோடு இருக்கவே கூடாது


 2. Mohamed SR. Nisthar on September 16, 2017 12:17 pm

  ஜேம்ஸ் பொண்ட்! அப்படி என்றால் சுவிஸ் குமார் தலையும் பிரபாகரன் தலைபோல் கோடாலியால் கொத்தப்படவேண்டும் ,

  பின்குறிப்பு::::: எனது விருப்பமும் அதுதான்,… உங்கள் விருப்பத்துக்கு தீர்ப்பளிப்பது என்றால், குற்றைவாளியை நியாயப்படுத்து வருவர்களின் விருப்பம் என்னாவது. ஆகவே நீதிபதியின் கடமை குற்றம் ஒன்று நியாயமான சந்தேகத்துக்கப்பால் நிரூபிக்கப்பட்டால், இலங்கையின் “தண்டனை சட்டக் கோவை” ( Penal Code ) பிரகாரமே தண்டனை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிபதி சங்கடத்தில் மாட்டிக் கொள்வார்.


 3. karuppan on September 20, 2017 10:32 am

  இங்குதான் தேசம்நெட் தனது பணியில் மிக உச்ச கடடத்தில் செயற்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. உண்மையை திரிபு படுத்துவதில் ஜெயபாலனுக்கு நிகர் நிகர் ஜெயபாலன் தான். நீதியரசர் இலங்கை சடடதுறையில் நிகழ்ந்த ஒரு உதாரணத்தை தான் கூறி இருந்தார். அதாவது ஒருவர் குற்றம் புரிந்தவர் என தீர்ப்பு அழிப்பதற்கு குற்றவாளி நேரடியாக பங்குபற்றி இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆம் பிரபாகரனுக்கு இலங்கை நீதிமன்றம் குற்றவாளி என தீர்த்து நூறு ஆண்டுகால தீர்ப்பளித்தது என்பது மிகவும் உண்மை. ஆனால் பிரபாகரனையும் ஸ்விஸ்க்குமாரையும் நீதிபதி ஒப்பிட்ட்தாக ஜெயபாலன் எழுதியிருப்பது இன்னொரு மிகப் பெரிய படு கொலை என்றே கூறவேண்டும். இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக்காக மகிந்த ஆட்சியில் (ஜெயபாலனின் தலைவன்) நீதி மன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்டு சிறைவாசம் சென்றார். அதே நீதிமன்றம் சிறிசேனா ஆட்சியில் (ஜெயபாலனின் கருத்தில் இவர் மகிந்தவின் கோழை) அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளித்து அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்ட்து. இது ஸ்ரீலங்காவின் நீதிமன்றம் என்பதைவிட சிங்கள ஆட்சியாளரின் தீர்ப்பு மன்றம் என்பது தான் மிக பொருத்தமானது. இங்கு ஒருசிலருக்கு பிரபாகரனை கோடாலியால் கொலை செய்ய ஆசை. அதுமட்டுமா இவர்களுக்கு பலவித ஆசைகள். ஆசைகள் யாரைத்தான் விட்ட்து. சுவிஸ் குமார் என்ன புத்த பகவானின் கோவிலையா தாக்கினார் இலங்கை சடட கோவையின் படி தீர்ப்பு வழங்க. மகிந்தவின் புதல்வன் செய்யாததையா இந்த சுவிஸ் குமார் செய்தார். இல்லை டக்லஸ் தேவானந்தா செய்யாத விபச்சார வியாபாரமா இவர் செய்தார். இங்குதான் தேசம்நெட் தனது பணியில் மிக உச்ச கடடத்தில் செயற்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. உண்மையை திரிபு படுத்துவதில் ஜெயபாலனுக்கு நிகர் நிகர் ஜெயபாலன் தான். நீதியரசர் இலங்கை சடடதுறையில் நிகழ்ந்த ஒரு உதாரணத்தை தான் கூறி இருந்தார். அதாவது ஒருவர் குற்றம் புரிந்தவர் என தீர்ப்பு அழிப்பதற்கு குற்றவாளி நேரடியாக பங்குபற்றி இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆம் பிரபாகரனுக்கு இலங்கை நீதிமன்றம் குற்றவாளி என தீர்த்து நூறு ஆண்டுகால தீர்ப்பளித்தது என்பது மிகவும் உண்மை. ஆனால் பிரபாகரனையும் ஸ்விஸ்க்குமாரையும் நீதிபதி ஒப்பிட்ட்தாக ஜெயபாலன் எழுதியிருப்பது இன்னொரு மிகப் பெரிய படு கொலை என்றே கூறவேண்டும். இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக்காக மகிந்த ஆட்சியில் (ஜெயபாலனின் தலைவன்) நீதி மன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்டு சிறைவாசம் சென்றார். அதே நீதிமன்றம் சிறிசேனா ஆட்சியில் (ஜெயபாலனின் கருத்தில் இவர் மகிந்தவின் கோழை) அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளித்து அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்ட்து. இது ஸ்ரீலங்காவின் நீதிமன்றம் என்பதைவிட சிங்கள ஆட்சியாளரின் தீர்ப்பு மன்றம் என்பது தான் மிக பொருத்தமானது. இங்கு ஒருசிலருக்கு பிரபாகரனை கோடாலியால் கொலை செய்ய ஆசை. அதுமட்டுமா இவர்களுக்கு பலவித ஆசைகள். ஆசைகள் யாரைத்தான் விட்ட்து. சுவிஸ் குமார் என்ன புத்த பகவானின் கோவிலையா தாக்கினார் இலங்கை சடட கோவையின் படி தீர்ப்பு வழங்க. மகிந்தவின் புதல்வன் செய்யாததையா இந்த சுவிஸ் குமார் செய்தார். இல்லை டக்லஸ் தேவானந்தா செய்யாத விபச்சார வியாபாரமா இவர் செய்தார்.
  மகிந்தவிற்கு கோடாலி வியாபாரம் செய்யும் ……..


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு