ஏழு படகுகளை மீட்டுச் செல்லும் தமிழக மீனவர்கள்


12_TN_Boatகடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவென வந்திருக்கும் மீட்புக் குழுவினர், விடுவிக்கப்பட்ட படகுகளில் ஏழு படகுகளை மீட்டுள்ளனர்.

அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்களைக் கைது செய்த கடற்படையினர், அவர்களது படகுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

முன்னதாக, படகுகளை ஆய்வு செய்திருந்த தமிழக மீனவர் குழுவினர், அவற்றுள் 38 படகுகளை மட்டும் மீட்க முடிவு செய்திருந்தனர்.

அதன்படி, அண்மையில் இலங்கை வந்திருக்கும் மீட்புக் குழுவினர், ஏழு படகுகளை மட்டும் மீட்டெடுத்து காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கிருந்து நாளை காலை சுமார் ஆறு மணியளவில் ஏழு படகுகளையும் இராமேஸ்வரத்துக்கு எடுத்துச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு