வடமாகாண முதலமைச்சரின் கருத்தை கவனத்தில் கொள்ளப்போவதில்லை – அரசாங்கம்


ruvanவடமாகாணத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினர் தொடர்பாக லடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்தக் கருத்தினை வெளியிட்டாலும் அதனைக் கருத்தில் கொள்ளப்போவதில்லையென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்ருவான்விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்புத் தொடர்பான தீர்மானங்களை, சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமே முன்னெடுத்து வருகின்றது.

வடமாகாண முதலமைச்சர் பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார். அவரது கருத்துக்கள் அடிப்படைவாத முறையில் உ;ள்ளது.

30ஆண்டுகள் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம்செலுத்தி வருவதாகவும், முதலமைச்சர் கோருவதற்கிணங்க வடக்கிலுள்ள இராணுவத்தினரையோ, முகாம்களையோஅகற்ற முடியாது எனவும்தெரிவித்து;ளளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு