வைரவிழாவுக்கு வடமாகாணமுதலமைச்சர், கல்வி அமைச்சரை அழைக்காதிருக்க 7 இலட்சம் பேரம் பேசினார் சிறிதரன்


sritharan-mp1கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்விற்கு பிரதமவிருந்தினர் அழைப்புத் தொடர்பாக இடம்பெற்ற பிரச்சனையில் குறித்த விழா கல்வி அமைச்சினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிப்படுகின்றது.

குறித்த சம்பவம்தொடர்பாகத் தெரியவருவதாவது,

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு வைர விழா நிகழ்வுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோரை அழைக்காது என்னை அழைத்தால் நான் 2 இலட்சம் ரூபா பணமும், சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறி 5மில்லியன் பெறுமதியான கட்டடம் ஒன்றையும்  கட்டித்தருவேன் என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தற்கமைய அவர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, இது தொடர்பாக பாடசாலையின் பழையமாணவர்களில் ஒருபகுதியினரும், ஊர் சமூக அமைப்புக்களும் இணைந்து வடக்குமாகாண கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தவிடயம் குறித்து நேற்று வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இடம் பெற்ற கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விடயத்தை வடக்கு கல்வி அமைச்சர் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் ஆலோசனைக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் குறித்த நிகழ்வை உடனே இடைநிறுத்தி பாடசாலையின் அனைத்து சமூகங்களின் முழு ஒத்துழைப்புகிடைக்கும் பட்சத்தில் வேறு ஒரு நாளில் நிகழ்ச்சியை நடாத்துவதற்கு அனுமதி வழங்குமாறும் வடக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு ஆலோசனைவழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில்  வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

எதிர்வரும் இரண்டாம் திகதி  கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் வைர விழா நிகழ்வுகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  கல்வி அமைச்சின் செயலாளரின் கடிதம் மூலம் விழாவினை பிறிதொரு தினத்தில் ஒத்தி வைக்குமாறு கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளாருக்கு ஊடாக கடிதம் அனுப்பபட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு