இராயப்பு யோசப் ஆண்டகையை சந்தித்து நலம் விசாரித்த சம்பந்தன் ஐயா


DSC_0175மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரான இராயப்பு யோசப் ஆண்டகை கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் ஓய்வுநிலையில் இருந்து வருகின்றார்.

இன்று பிற்பகல் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன், மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையை சந்தித்து சி பெற்றதோடு,நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் உரையாடினார்.

 

அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர், மன்னாரில் காணாமல்போனோரின் உறவினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசையும் கலந்து கொண்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து வடமாகாணத்தில் காணமால் போனவர்களின் உறவினர்களுக்கும்,எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில்  மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

 

இதன் போதுகாணாமல் போனவர்களின் நிலைப்பாடு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக அறிய முடிகின்றது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு