ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கெதிரான வன்முறை : இதுவரை டொன் பிரியசாத் உட்பட 6 பேர் கைது


pikkuகல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டொன் பிரியசாத் உட்பட நால்வரை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர்  கைதுசெய்துள்ளனர்.

கடல்மார்க்கமாக 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இலங்கை நோக்கி வந்த நிலையில் நீதிமன்ற தீர்பின் படி அவர்களை கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்ட வீட்டிற்கு முன்னாள் பிக்குகள் உட்பட சிலர் வன்முறையில் ஈடுபட்டதுடன் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அவர்களின் பாதுகாப்புக் கருதி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் பூஸா தடுப்பு முகாமில் கொண்டுசென்று அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது.

குறித்த கல்கிசை வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை ஒருவரும் இன்று காலை பெண்ணொருவரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று மாலை டொன் பிரியசாத் உட்பட நால்வரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 6 பேர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு