அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு: அமெரிக்க கனவுலக நகர் லாஸ்வகஸ் இல் துப்பாக்கிச்சூடு 60 பேர் மரணம்! 200 பேர் காயம்!


US_Shooting_Stephen_C_Paddockஇன்று அதிகாலை அமெரிக்க கனவுலக நகரான லாஸ்வகஸ் இல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 60 பேருக்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 200 பேருக்கு அதிகமானவர்கள் காயமடைந்து உள்ளனர். 64 வயதுடைய இஸ்ரிபன் படொக் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது லாஸ்வகஸ் இல் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 30 000 பேர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது.

அமெரிக்காவில் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பொதுவானதாக இருந்த போதும் நவீன அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மிகவும் மோசமானதாகக் கணிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் அதன் பிரஜைகள் துப்பாக்கிகளை வைத்திருப்பதை தங்களது உரிமையாகக் கருதி வருகின்றனர். துப்பாக்கி வியாபரம் அமெரிக்காவின் முக்கிய இடத்தை வகிக்கின்றது. துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வருபவது பற்றிய விவாதங்கள் பெரும்பாலான அமெரிக்கர்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்றது.

US_Mass_Shootingபாராக் ஓபாமா தனது பதவிக்காலத்தில் துப்பாக்கிகள் வைத்திருப்பது தொடர்பான கட்டுப்பாடுகளைக் கொண்டு வர முயற்சித்த போது அவருக்கு மிகுந்த எதிர்ப்பு காட்டப்பட்டது. பாடசாலைகளுக்குள் நடக்கும் துப்பாக்கிச் சூட்டுசம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் துப்பாக்கிகள் இருப்பதே பாதுகாப்பானது என்று துப்பாக்கி ஆர்வலர்கள் வாதிட்டு வருகின்றனர்.

இதன் பின்னணியிலேயே ஸ்ரிபன் படொக் என் 64 வயதான வெள்ளை இனத்தவர் கனவுலக நகரின் மாண்டலே பே சூதாட்ட ஹொட்டலில் புகுந்து அதன் 32வது மாடியில்  இருந்து ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தி உள்ளார்.

கொலையாளி இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தி 5 நிமிடங்கள் வரை தாக்குதலை நடத்தியதாகவும் இறுதியில் பொலிஸார் தாக்குதல் தாரியை அடையாளம் கண்டு சுட்டுக்கொன்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. தாக்குதல் தாரி தன்னைத் தானே சுட்டுக்கொன்றாரா? பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. தாக்குதல் நடத்திய இடத்தில் 10 வரையான கனரக துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

Las_Vegas_Shooting_Policeகொல்லப்பட்டவர்களில் உத்தியோகத்தில் இராத இரு பொலிஸாரும் அடங்குகின்றனர். தாக்குதல் தாரியின் வீட்டை முற்றுகையிட்ட போது தொகையான ஆயுதங்களும் அவற்றுக்கான குண்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்து
  1. BC on October 3, 2017 8:42 pm

    //வயதான வெள்ளை இனத்தவர் கனவுலக நகரின் மாண்டலே பே சூதாட்ட ஹொட்டலில் புகுந்து அதன் 32வது மாடியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தி உள்ளார்.//
    32வது மாடியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கொலையாளி தாக்குதலை நடத்தினார் என்ற தகவல் ரோஹிஞ்சா கட்டுரையாளர் தான் ஜெயபாலனுக்கு கொடுத்தாரோ.


  2. T Jeyabalan on October 4, 2017 7:39 am

    “32வது மாடியில் இருந்து ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தி உள்ளார்.” என்று வந்திருக்க வேண்டும் BC. தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. கட்டுரையில் திருத்தப்பட்டு உள்ளது.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு