புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கு முன்னுரிமை, பிரிவினைக்கு அனுமதியளிக்காத வகையில் அமைந்திருக்கும் – ரணில்


ranilபுதிய அரசியல் யாப்பானது ஒற்றையாட்சித் தன்மை மாறுபடாதவாறு, பௌத்தத்திற்கு முன்னுரிமையுடன் மற்றைய மதங்களையும் பாதுகாப்பதோடு, பிரிவினைக்கு ஒருபோதும் ஆதரவளிக்காத நிலையிலேயே உருவாக்கப்படும் என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், டி.எஸ்.சேனநாயக்க காலத்திலிருந்து இந்த நாட்டில் ஒற்றையாட்சியே நடைபெற்று வருகின்றது.

1972ஆம் ஆண்டு ஒற்றையாட்சித்தன்மை நாடாளுமன்றத்தின் மூலம் சட்டபூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதிகாரங்களைப் பகிரும் வகையில் 13ஆவது அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

புதிய அரசியல் யாப்பானது ஒற்றையாட்சித் தன்மை மாறுபடாதவாறுஇ பௌத்தத்திற்கு முன்னுரிமையுடன் மற்றைய மதங்களையும் பாதுகாப்பதோடுஇ பிரிவினைக்கு ஒருபோதும் ஆதரவளிக்காத நிலையிலேயே உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு